திங்கள், 24 அக்டோபர், 2011

தொல்லை தரும் 8ம் மிடம்பொதுவாக ஒருவரது வாழ்கையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களையும், பிரச்சனைகளையும் அறிய உதவுவது, எட்டாமிடமாகும். எட்டுக்குடயவனின்
 திசா, புக்தி மற்றும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களின் திசா, புக்தி போன்றவை நடைபெறும்போது ஜாதகருக்கு பிரச்சனைகளும், சங்கடங்களும் பெருமளவில் ஏற்படும்

ஜென்ம லக்னத்தில் எட்டுக்குடையவர் இருந்திடப் பிறந்தவருக்குப்  வாழ்க்கையே போராட்டமாக  இருக்கும். மனத தளர்ச்சியும், சோர்வும் ஏற்படும்  இருக்கும். ஏதாவது ஒன்று ஏற்பட்டு ஜாதகரது நிம்மதியைக் கெடுத்து, வருத்தப்பட வைத்துவிடும்.

தன் குடும்ப வாக்குஸ்தானம் என்னும் இரண்டாம்பவதில் எட்டுகுரியவர் இருந்தால்,தொழில் அல்லது உத்தியோகத்தில் பிரச்சனைகள் தலைதூக்கிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து ஜாதகர் அதை விட்டு விலகி, வேறொரு தொழில் அல்லது உத்தியோகத்துக்கு அலையும்படி நேரும.
 எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாகுறை ஏற்பட்டு பணத்துக்காக அலயநேரிடும். குடும்பத்தில் நிம்மதியிருக்காது.அவரசு பேச்சே
 மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்.


மூன்றாமிடத்தில் எட்டுக்குரியவர் இருக்கப் பிறந்தவர் சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இல்லாதபடியும், கடுமையான சொற்க்களைப் பேசி, மற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகும் நிலையை
யும் தரும்.

4மிடத்தில் 8 க்குரியவர் இருந்தால் தகப்பனார் தேடி வைத்தசொத்தை அழிப்பவராகவும், குழந்தைகளுடன் கருது வேறுபாடு கொள்பவராகவும்,
 மனை, வீடு, வாகனம் இவைகளில் பிரச்சனை எதிர்கொள்பவராகவும் இருப்பார்

5மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் நிலையில்லாத  புத்தியும், நிதானமில்லாத போக்கும், அரசாங்கத்தால் தொல்லையும், தரம் குறைந்தவர்களுடன் தொடர்பும் அதனால் அடிக்கடி பிரச்சனைகளைச் சந்திப்பதுமாக இருக்கும்

6மிடத்தில் 8க்குரியவர் இருந்தால் மற்றவர்களுடன் மனக்கசப்பும் , அடிக்கடி சண்டை சச்சரவுக்கு ஆளாகுதலும் நேரிடும்.
எட்டுகுரியவருடன் சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி நோய்ஏற்படும்
7மிடத்தில் 8க்குரியவர் இருந்தால்  ஒழுக்கமில்லாதவர்களுடன் தொடர்பும், ஆசன வாயில் நோய்த் தொல்லையும் வரும். எட்டுக்குரியவர் அசுபர்களுடன் சேர்ந்து ஏழாமிடத்தில் இருந்தால் பெண்களால் பிரச்சனைகள் ஏற்படும். . செவ்வாய் எட்டுக்குரியவருடன் சேர்ந்து இந்த பாவத்தில்  இருந்தால்  ஜாதகர் அமைதியாகவும்  விடாமுயற்சியுடன் தொடர்ந்து போராடுபவராகவும் இருப்பார்.

 எட்டுக்குரியவர் எட்டிலேயே இருந்தால்  ஜாதகருக்கு நிறைந்த ஆயுளும் அதிகமான நிலபுலன்களும், மற்றவர்களால் அறிய முடியாத ரகசிய விவகாரங்களில் ஈடுபடுபவராகவும் ஜாதகர்  இருப்பார்.

பாக்கியஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் எட்டுக்குரியவர் இருந்தால் ஜாதகருக்கு தகப்பனாருடன் சுமூகமான  உறவிருக்காது. முன்னோர்களின் சாபம் இவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையிடும். மனதில்
 எப்போதும் ஏதாவது குழப்பமும், தேவையற்ற பயமும் இருக்கும். இவருடன் நீண்டகாலம் யாரும் பழக மாட்டார்கள். தொழிலில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டபடி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.
 அடிக்கடி தொழில்அல்லது உத்யோகத்தை விட்டு விட்டு வேற தொழில் அல்லது வேலை தேடும் அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.

 ஜாதகத்தில் எட்டுக்குரியவர் பத்தாம் பாவத்தில் இருந்தால்
 வேலையில் இருப்பவர்கள் பணிபுரியும் இடத்தில் அவமானங்களும்,
வேலைப்பளு, ஊதியக்குறைவு, மரியாதைக் குறைவு போன்ற அதிருப்தியான பலன்களை அதிகம் சந்திப்பர்.

லாபஸ்தானத்தில் எட்டுக்குரியவர் இருந்தால்  அவர் ஈட்டும் வருமானம் பல வழிகளிலும் கரைந்து காணாமல் போய்விடும். இவரது உழைப்பை பலரும் உறிஞ்சி பயனடைவர். பிள்ளைகளால் மனக்கசப்பும் அதிருப்தியும் இருக்கும்.

பன்னிரண்டாமிடத்தில் எட்டுக்குரியவர் நின்றிட்டால், வேலையில் கெட்டிக்காரனாக இருந்தாலும் விருப்பம் இல்லாமல்  வேலை செய்வது, இல்லாவிட்டால் மனம் போனபடி சுற்றுவது அல்லது முடங்கிக் கிடப்பது என்று தன்  விருப்பப்படி நடந்து கொள்ளும் போக்கு காணப்படும்.
என்ன இருக்கு?