திங்கள், 24 அக்டோபர், 2011

ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?


ஒருவருக்கு பணம்  தந்தை மூலமோ , அரசாங்கம் மூலமோ, தாய் மூலமோ , சகோதர வழிகள் மூலமோ,  நண்பர்கள் மூலமோ , உறவினர்கள் மூலமோ, பெண்கள் மூலமோ இப்படி எண்ணற்ற வழிகள் மூலம் வரலாம்

1 ஒருவரது ஜாதகத்தில் பத்தாமிடத்தில்   சூரியன் அமர்ந்திருக்கப் பிறந்தவருக்கு அவரது தந்தை மற்றும் அவரது உறவுகள் மூலம் வருமானமும் சொச்துக்களும்  வரும்.

2. சந்திரன் பத்தாமிடத்தில் இருந்தால், தாய் அல்லது தாய்வழி உறவினர்கள் மூலம்  வருமானத்திற்கு வழியேற்படும்.

3. சிலருக்கு தொழிலில் அல்லது உறவுகளில் அல்லது வெளிவட்டாரத்தில் பகையாவதும் உண்டு . இந்த  பகைவர்களின் சொத்துக்களோ அல்லது அவர்கள் மூலம் நஷ்டஈடு பெறுவதனாலு  வருமானம் வருவதுண்டு. இதற்கு பத்தாமிடத்தில் அங்காரகன் அமர்ந்திருப்பது அவசியம். கோர்ட்டு, வழக்கு, வியாக்யங்கள் மூலம் பெரும் வருவாய் ஏற்பட மேற்கூறிய நிலை காரணமாக
அமையும்.

4. சிலருக்கு பெண்கள் மூலமாகவும் வருமானத்துக்கு வழியேற்படும். மனைவி அல்லது காதலி அல்லது வேறு வகையில் பெண் தொடர்பு ஏற்பட்டு அதன்மூலமாகவும் பெரும் பணம் அல்லது சொத்துக்கள் சிலருக்கு அமையும்.

5. சிலருக்கு தங்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், வேலைக்காரர்கள் மூலமும் பெரும் பணம் கிடைக்கும்.

6. . திடீரென்று ஒரு நாள், கார், பங்களா, நகை, சொத்து என்று பெரும் பணக்காரர்களாகி, எல்லோரையும் வியக்க வைக்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இதற்கு ராகுவும், கேதுவுமே காரணமாக அமைவர். ஒருவர் ஜாதகத்தில் பத்தாம் பாவத்தில் ராகுவோ, கேதுவோ இருந்தால் அவருக்கு மேலே கூறியபடி, எப்படி செல்வம் வந்தது என்று அறிய முடியாதபடி, மறைமுகமாகவும் வருமானம் வரும்.

எப்போது வருமானம் வரும்?
ஒருவருக்கு பத்தாமிடத்திலிருக்கும் கிரகத்தின் திசா, புத்தி நடைமுறையில்
இருக்கும்போது  வருமானம் வரும்.
ஜாதகப்படி எந்தந்த முறைகளில் பணம் வரும்?
ஒருவரின் வருமாணத்தை அறிய ஜாதகத்தில் எங்கு பார்க்க வேண்டும்?
லக்னப்படி அமையும் தொழில் என்னன்ன?


கிரகங்களால் அமையும் தொழில்
என்ன இருக்கு?